Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழுது ஏற்பட்ட படகை சிறைபிடித்துச் சென்ற இலங்கைக் கடற்படையினர்!

படகு பழுதடைந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள்  நான்கு பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
இலங்கை அரசு எடுத்துவரும் கடும் நடவடிக்கையின் விளைவாக, பாரம்பர்யமாக மீன்பிடிக்கச் செல்லும் பகுதிகளுக்குச் சென்று மீன்பிடிக்க முடியாமல், தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவருகின்றனர். குறுகிய கடல் பரப்பான பாக் நீரிணைப் பகுதியை நம்பியிருக்கும் சுமார் 4,500 விசைப்படகுகளும் அவற்றை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்களும் மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல முடியாதநிலை உள்ளது. 

தமிழக மீனவர்கள் படகுகள்


இந்நிலையில், இயற்கை இடர்பாடுகளால் எல்லை தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களையும் இலங்கைக் கடற்படை சிறைபிடித்து வருகிறது. நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு படகுகளை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் ஒரு படகு, இன்ஜின் பழுதால் எல்லை தாண்டிச் சென்றதாகத் தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் படகையும் அதில் இருந்த நான்கு மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர். 
வழக்கமாக பழுது ஏற்படும் படகுகளை சிறைப்பிடிக்காமல், அவற்றைத் திருப்பி அனுப்பும் இலங்கைக் கடற்படையினர், இம்முறை பழுது ஏற்பட்ட படகை சிறைபிடித்துச் சென்றிருப்பது அந்தப் பகுதி மீனவர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement