வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (05/10/2017)

கடைசி தொடர்பு:14:57 (05/10/2017)

'தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்'- இரட்டை இலை விவகாரத்தில் தினகரனின் மனு தள்ளுபடி

இரட்டை இலை விவகாரம் தொடர்பாகக் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்துள்ளது. 

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக இறுதி விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது. மேலும், செப்டம்பர் 29-ம் தேதிக்குள் இதுதொடர்பாக ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால், சின்னம் விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய 15 நாள்கள் அவகாசம் அளிக்கக் கோரி தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் நிராகரித்திருந்த நிலையில், அதை எதிர்த்து தினகரன் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு அறிவுறுத்தி, தினகரனின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.