Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பரோல் கேட்டு சசிகலா தாக்கல் செய்த ஆவணங்கள் சரிபார்ப்பு..!

பரோல் கேட்டு சசிகலா தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.


சசிகலா கணவர் நடராசன் உடல்நலப் பாதிப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதையடுத்து தற்போது அவருக்கு உறுப்பு  மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில், நடராசனைப் பார்ப்பதற்கு சசிகலா கர்நாடகச் சிறைத்துறையில் பரோல் கேட்டு  விண்ணப்பித்திருந்தார். அதற்காகச் சில ஆவணங்களையும் சிறைத்துறையில் தாக்கல் செய்திருந்தார். கர்நாடகச் சிறைத்துறை சசிகலா குறித்த ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காகத் தமிழ்நாடு காவல்துறைக்கு அனுப்பியிருந்தது. இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை தெரிவிக்கையில், 'சசிகலா குறித்த ஆவணங்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படுகிறது. ஆவணங்கள்  சரிபார்க்கப்பட்ட பின், கர்நாடகச் சிறைத்துறைக்கு அனுப்பிவைக்கப்படும்' என்று கூறியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement