டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் பெயர்கள் நான்கு நாள்களில் வெளியிடப்படும்! சொல்கிறார் விஜய பாஸ்கர் | Dengue fever cause died person names will be disclosed within four days,

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (05/10/2017)

கடைசி தொடர்பு:18:00 (05/10/2017)

டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் பெயர்கள் நான்கு நாள்களில் வெளியிடப்படும்! சொல்கிறார் விஜய பாஸ்கர்

டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் பட்டியல் நான்கு நாள்களில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாடு முழுவதும் டெங்குக் காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இருந்துவருகிறது. தமிழக சுகாதாரத்துறை டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும் டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்தமுடியவில்லை. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 'டெங்குக் காய்ச்சலையும், டெங்கு கொசுவையும் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் டெங்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் மருந்துகள் வழங்கக் கூடாது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் மருந்தகங்களில் டெங்கு குறித்த விழிப்புஉணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மூன்று மாதங்களில் இரண்டு லட்சம் பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமையன்று மாநிலம் முழுவதும் டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படும். டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் பெயர்கள் நான்கு நாள்களில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்' என்றார்.