வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (05/10/2017)

கடைசி தொடர்பு:13:16 (10/07/2018)

ராமநாதபுரம் அருகே இடி தாக்கி பெண் பலி; 4 பேர் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தில், இடி தாக்கியதால் ஒரு பெண் பலியானார்.  நான்கு பேர் காயமடைந்தனர். 

இடி தாக்கியதில் காயமடைந்தவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தில், இன்று மாலை திடீரென இடி தாக்கியது. இதில், அந்த கிராமத்துக்கு வயல் வேலைக்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம் மேல்மந்தை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணியம்மாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருடன் வேலைபார்த்துக்கொண்டிருந்த அபிராமத்தைச் சேர்ந்த அன்னாள் ஜோதி, முத்துமணி, ராவுத் பாதிரியா, மேலகொடுமலூரைச் சேர்ந்த முனியசாமி ஆகிய  நான்கு பேர் காயமடைந்தனர்.

உடனிருந்தவர்கள், காயமடைந்த நான்கு பேரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சேர்த்தனர். உயிரிழந்த அந்தோணியம்மாளின் உடல், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, சத்திரக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.