Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இரட்டை இலை' சின்னம் விவகாரம்..! இன்று இறுதிக்கட்ட விசாரணை

அ.தி.மு.க-வின் கட்சிப் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கும் விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தில் இன்று இறுதிக்கட்ட விசாரணை நடைபெற உள்ளது. 


ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. கட்சிப் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள், டி.டி.வி.தினகரன், தீபா ஆகியோர் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரங்கள் மற்றும் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி, தேர்தல் ஆணையர்கள் ஓம் பிரகாஷ் ராவத், சுனில் அரோரா ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடைபெற உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராக உள்ளார். டி.டி.வி.தினகரன் அணி சார்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜராக உள்ளார். இன்றைய இறுதிக்கட்ட விசாரணைக்குப் பிறகு, ஓரிரு வாரங்களில் சின்னம் யாருக்கு என்பதுகுறித்த முடிவு அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement