Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெங்குவை ஒழிக்க அரசு சுனாமி வேகத்தில் செயல்படுகிறது! சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ

'டெங்கு ஒழிப்புப் பணியில், தமிழக அரசு சுனாமி வேகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது' என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 


டெங்கு காய்ச்சல் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டுவருகிறது. தமிழக அரசு தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும், டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, 'டெங்கு ஒழிப்புப் பணியில் தமிழக அரசு சுனாமி வேகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக 400 பேர் இறந்ததாக மு.க.ஸ்டாலின் கூறுவது தவறானது. 2015-ம் ஆண்டு வெள்ளம் வந்ததற்கு தி.மு.க-தான் காரணம்' என்று தெரிவித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, 'டெங்கு ஒழிப்பு விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தேவை. உள்ளாட்சிப் பிரதிதிகள் இல்லாததன் காரணமாகவே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement