Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீதர் உடல் இந்தியாவுக்கு எப்போது வரும்?

காஞ்சிபுரத்தின் பிரபள தாதா ஸ்ரீதர் இறந்துவிட்டதாக, கடந்த 4-ம் தேதி இரவு அவரது வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன் மீடியாக்களுக்குத் தெரிவித்தார். அதேபோல காவல்துறையினரும் ஸ்ரீதரின் ஆதரவாளர்களைத் தேடிப்பிடித்து விசாரித்துவருகின்றனர். கம்போடியாவில் ஸ்ரீதர் இறந்த நிலையில் எடுத்த படம், வாட்ஸ்அப் மூலம் மகள் தனலட்சுமிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீதர் ஆதரவாளர்களைக் கைதுசெய்தனர். ஸ்ரீதரின் உடலை கொண்டுவர, அவரது மகன் சந்தோஷ்குமார், மகள் தனலட்சுமி, வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன் ஆகியோர் கம்போடியா சென்றிருக்கிறார்கள்.

ஸ்ரீதர்

சந்தோஷ் ஹதிமானி“ஸ்ரீதர் இறந்தது உண்மைதானா என்ற சந்தேகம் இருப்பதால், காவல்துறையினர் யாரும் கம்போடியா செல்லவில்லை. ஸ்ரீதரின் உடலைக் கொண்டுவருவதற்காக, இரு நாட்டுத் தூதரகமும் எந்த ஒரு தொடர்பும் கொள்ளவில்லை. போலி பாஸ்போர்ட்டில் ஸ்ரீதர் சென்றிருக்கலாம். மேலும், அவரிடம் நிறைய போலி பாஸ்போர்ட் இருக்கலாம்” என்கிறார், காஞ்சிபுரம் எஸ்.பி., சந்தேஷ் ஹதிமானி.

இன்று, கம்போடியாவில் விடுமுறை. அதுபோல சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் உடலைக் கொண்டுவருவதற்கான வேலைகள் நடைபெறாது. அதன் பிறகு, இந்தியத் தூதரகம் மூலம் அனுமதி பெற வேண்டும். போலி பாஸ்போர்ட் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். இவையெல்லாம் முடிய, குறைந்தது ஒரு வாரம் ஆகும். அதன் பிறகே, ஸ்ரீதரின் உடல் இந்தியா வரும் என்கிறார்கள்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement