Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கை வரும் 23-ம் தேதி வரை விசாரிக்க இடைக்காலத் தடை !

தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கை, வரும் 23-ம் தேதி வரை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், டி.டி.வி. தினகரன் மனுத்தாக்கல் செய்துள்ளார் அந்த மனுவில், " கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நடிகர் செந்தில் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில், திருச்சி அ.தி.மு.க. எம்.பி., குமார்குறித்து தரக் குறைவாகவும், அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக,  திருச்சி  நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் எம்.பி., குமார் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில், என்மீது நடிகர் செந்திலை பேட்டிகொடுக்கத் தூண்டியதாகக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தப் புகார், அடிப்படை ஆதாரமற்றது.

 எந்தவித முகாந்திரமும் இல்லாமல், அரசியல் உள் நோக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை முகாந்திரம் இல்லாத இந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதி சுந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்டோபர் 23 வரை வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, நடிகர் செந்தில் தாக்கல்செய்த வழக்குடன் இந்த வழக்கையும் பட்டியலிட உத்தரவிட்டு, வழக்கு வருகிற 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement