வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (06/10/2017)

கடைசி தொடர்பு:17:00 (06/10/2017)

காஞ்சி தாதா - ஸ்ரீதருக்கு அடுத்து இவர்தான்!

காஞ்சிபுரம் ஸ்ரீதர் வெளிநாடுகளில் பதுங்கி இருந்தபோது, அவரின் கூட்டாளிகள் மூலமாக காஞ்சிபுரத்தில் உள்ளவர்களை மிரட்டிவந்தார். அவர், துயாய் சிறையில் இருந்தபோது அருள், தி.மு.க ஒன்றியப் பொருளாளர் தசரதன், தினேஷ், தீனதயாளன், செந்தில் ஆகியோர்மூலம் ஸ்ரீதரின் அசைன்மென்ட்டுகள் முடிக்கப்படும். 2014-ல் காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி-யாக ஸ்ரீதாத் பொறுப்பேற்றுக்கொண்டதும், ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் மீது வழக்குகள் பாய்ந்தன. கூட்டாளிகள், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். ஆதரவாகச் செயல்படுபவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

ஸ்ரீதர்

ஸ்ரீதர் இறந்த தகவல் கிடைத்ததும், காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீதர் ஆதரவாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டனர். இதனால் கடையடைப்பு, போக்குவரத்துப் பாதிப்பு என எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இந்த நிலையில், ஸ்ரீதருக்கு நெருக்கமான சிறுவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டுவருவதற்கு நிதியுதவி செய்துள்ளார்.

ஸ்ரீதருக்கு அடுத்து நான்தான் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறிவருகிறார். அதுபோல, டெய்லர் ஜிப்ரா பாபு என்பவர் களத்தில் இறங்கியுள்ளார். இந்தத் தகவல், காஞ்சிபுரம் எஸ்.பி.சந்தோஷ் ஹதிமானிக்குத் தெரியவர, உடனடியாக அவர்களைக் கைதுசெய்ய உத்தரவிட்டுள்ளார். “ஸ்ரீதர் பெயரைச் சொல்லி காஞ்சிபுரத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டால், உடனடியாக நடவடிக்கை பாயும். இனி காஞ்சிபுரத்தில் சிறிய அளவில்கூட ரவுடிகள் தலைதூக்க முடியாது” என்கிறார் சந்தோஷ் ஹதிமானி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க