Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரட்டை இலைச் சின்னம் விவகாரம்! நவம்பர் 10-ம் தேதிவரை தேர்தல் ஆணையத்துக்கு அவகாசம்

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது என்று டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான இறுதி விசாரணை நடைபெற இருந்தநிலையில்  விசாரணைக்குத் தடை கேட்டு, டி.டி.வி.தினகரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கூடுதல் ஆவணம் தாக்கல்செய்ய கால அவகாசம் வேண்டும் என்பதால், இன்று நடக்கவிருக்கும் தேர்தல் ஆணைய இறுதி விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று தினகரன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டி.டி.வி.தினகரனின் கோரிக்கையை நிராகரித்ததோடு, விசாரணைக்கு தடை விதித்தால், தேர்தல் ஆணையம் இத்தனை நாள்கள் மேற்கொண்ட விசாரணை பாதிக்கப்படும் என்று தெரிவித்தது. மேலும், சின்னம் தொடர்பாக நவம்பர் 10-ம் தேதிக்குள் முடிவெடுத்தால் போதுமானது என்று தேர்தல் ஆணையத்துக்கு கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement