’மருத்துவக் கல்லூரி இயக்குநராக எட்வின் ஜோ தொடரலாம்' - உயர்நீதிமன்றம் | Madurai high court’s order about medical college director

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (06/10/2017)

கடைசி தொடர்பு:18:15 (06/10/2017)

’மருத்துவக் கல்லூரி இயக்குநராக எட்வின் ஜோ தொடரலாம்' - உயர்நீதிமன்றம்

மதுரையைச் சேர்ந்தவர் மருத்துவர் ரேவதி கயிலைராஜன். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக உள்ளார். இந்நிலையில், இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.

அந்தமனுவில்,  "மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனத்ததில் வேலைசெய்யும் சீனியாரிட்டி அடிப்படையிலும், குறிப்பிட்ட கால அளவு டீனாகவும் பணியாற்றியிருக்க வேண்டும். இதுபோன்ற குறிப்பிட்ட விதிகளுக்குப் புறம்பாக, தமக்கு வேண்டியவர்களை நியமிக்கும் வகையில் `விதிகளைத் தளர்வு செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம் நடைபெற்றுள்ளது. தற்போது என்னைவிட பணி மூப்பு குறைவான டாக்டர் எட்வின் ஜோ மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது விதிக்கு முற்றிலும் மாறானது. எனவே, பணி மூப்பு மற்றும் டீனாகப் பணிபுரிந்த அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் என்னை மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையில் எட்வின் ஜோவின் பணி நியமனம் விதிப்படி நடைபெறவில்லை என ரேவதி கயிலைராஜனைத் தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குநராக நியமனம் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர் .

அதைத் தொடர்ந்து தனிநீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசுத்தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஏற்கெனவே விசராணைக்கு வந்தபோது, எட்வின் ஜோவே மருத்துவக் கல்லூரி இயக்குநராகத் தொடர இடைக்கால உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 இந்நிலையில் இன்று  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அப்போது தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குநராக நியமனம் பெற தனக்கு உரிய தகுதி உள்ளது என மருத்துவ அதிகாரி மீனாட்சி சுந்தரம் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்கள் குறித்த விவரம் அரசு வழக்கறிஞர்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை எனக் கூறியதைத் தொடர்ந்து மனு மீதான விசாரணையை வருகிற 23-ம் தேதி ஒத்திவைத்தனர். அதுவரை தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குநராக எட்வின் ஜோ வருகிற 23-ம் தேதி தொடரலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.