ஆஸ்திரேலியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர்! | First ever women umpire in Australian men's cricket

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (06/10/2017)

கடைசி தொடர்பு:17:35 (06/10/2017)

ஆஸ்திரேலியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர்!

க்ளேயர்

சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் க்ளேயர் பொலொசாக். கிரிக்கெட்டில் இணைய என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, தோழி ஒருவரின் தந்தை நடுவருக்கான பட்டையப்படிப்பு ஒரு இடத்தில் இருப்பதை இவரிடம் தெரிவிக்க இவரும் இணைந்திருக்கிறார். தற்போது தன்னுடைய விடா முயற்சியாலும் கிரிக்கெட்டின் மீதான இவரது தீராத காதலாலும் 29 வயதில் ஆஸ்திரேலியாவில் ஆண்கள் கிரிக்கெட்டில் முதல் பெண் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 

வரும் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டொமெஸ்டிக் கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய நடுவர் இன்னிங்சை தொடங்க இருக்கிறார் க்ளேயர். முதலில் நடுவர் பயிற்சி என்பது மிகவும் கடினமானதாக இருந்ததாகச் சொல்லும் க்ளேயர், கிரிக்கெட்டின் மீதிருந்த அதீத ஈடுபாட்டால் இந்த நிலைக்கு முன்னேறி இருக்கிறார். அவருக்குத் தேவையான தற்காப்புச் சாதனங்களை வழங்குவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சொல்லி இருக்கிறதாம். கடுப்பான கேப்டன்களையும் கொலை வெறி பந்து வீச்சாளர்களையும் மட்டையடி வீரர்களையும் வரும் காலங்களில் க்ளேயர் சமாளிக்க வேண்டும்!