பார்வதியைப் பாராட்டிய மலையாள நடிகை!

ந்தி நடிகர் இர்பான் கான் நடிக்கும் ‘Qarib Qarib Singlle' திரைப்படம் மூலம் இந்தியில் அறிமுகமாகியிருக்கிறார் நடிகை பார்வதி. தமிழில்,  ’பூ, மரியான்’ ஆகிய திரைப்படங்களும் மலையாளத்தில் `பெங்களூரு டேஸ்,  என்னு நிண்டே மொய்தீன், டேக் ஆப்’ ஆகிய படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக அசத்திக்கொண்டிருப்பவர் பார்வதி. 

தற்போது இவர் இந்தி திரையுலகில், இர்பான் கானுடன்  ’கரிப் கரிப் சிங்கிள்’ நடிப்பதன்மூலம் அடியெடுத்துவைக்கிறார். இந்தத் திரைப்படத்தின் ‘ப்ர்ஸ்ட் லுக்’  நேற்று டுவிட்டரில் வெளியானது. அதைத் தொடர்ந்து, நடிகை பார்வதியின் தோழியும் மலையாள நடிகையுமான ரீமா கல்லிங்கல், அவருக்கு மனதார வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.


பார்வதி

 

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரீமா கல்லிங்கல், ”அருமையான  போஸ்டர்ஸ் பாருஸ்!  
நீ உன்னுடைய கேரியரை எப்படி வடிவமைத்துக்கொள்கிறாய் என்பதை மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது.
நீ இந்தியில் அறிமுகமாவதற்கு வாழ்த்துகள். எனக்குத் தெரிந்தவரை, “இந்தியில் அறிமுகம்” என்று கூறுவதைக்கூட நீ விரும்பமாட்டாய்.   உன்னைப் பொறுத்தவரை, ஒரு கலைஞர் ஒருமுறைதான் அறிமுகமாவார். வாழ்த்துகள் பாருஸ்!’ என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்திருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!