ஜல்லிக்கட்டு விசாரணைக்கு மனு அளித்த அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்

ஜல்லிக்கட்டு போராட்டக் கலவரம் தொடர்பாக நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் நீதிவிசாரணை மதுரையில் கடந்த நான்காம் தேதி தொடங்கி இன்றுவரை நடந்தது. மூன்று நாள்களாக மதுரை சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வந்த ஆணையர் ராஜேஸ்வரன், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஜல்லிக்கட்டு

‘‘மீண்டும் ஒருமுறை மதுரை வந்து விசாரணை செய்வேன். இந்த மூன்று நாள்களில் 32 பேரைச் சந்தித்துள்ளேன். இதில் 25 பேர் போலீஸாருக்குச் சாதகமாகத் தகவல் தெரிவித்துள்ளனர். மதுரையில் 997 பேர்  மனு கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் கொடுத்து விசாரணைக்கு வரவழைப்போம். யாரேனும் மீண்டும் மனு கொடுத்தால் பெறப்படும். இந்த விசாரணையின்போது மாணவன் ஒருவர், தன்மீது வழக்கு உள்ளது. இதனால் என் படிப்பு கெடுகிறது என்று வேண்டுகோள் வைத்தார். இது வழக்காகிவிட்டது, ஆகையால், தாங்கள்தான் வழக்கில் வெல்ல வேண்டும் என்று அவரிடம் சொல்லிவிட்டேன். மனு அளித்துள்ள 997 பேரில் 800 பேர் போலீஸாருக்கே சாதகமாகத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். விசாரணைக்கு வருகிறவர்களுக்கு போலீஸாரால் எந்தவித அச்சுறுத்தலும் கிடையாது, அப்படி இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம்’’ என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!