Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வருவதுதான் உயிர்ப் பலிக்குக் காரணம்’ -கோவை ஆட்சியர்

'தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு, கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வருவதே உயிர்ப் பலிக்குக் காரணம்' என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவிவருகிறது. கோவையிலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. நேற்று மட்டும் கோவையில் இரண்டு பேர் மர்மக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். ஆனால், அவர்கள் டெங்குவால் உயிரிழக்கவில்லை என்று கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்துவருகிறது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று ஆய்வுசெய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "டெங்கு காய்ச்சல் மட்டுமல்ல, வைரஸ், டைஃபாய்டு போன்ற காய்ச்சல்களும் பரவிவருகின்றன. கோவையில் 20 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதர காய்ச்சல்களால் 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது தவிர, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலிருந்தும் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லை. இங்கு 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.

பெரும்பாலானோர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படும் கடைசி நேரத்தில்தான், இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். அதனால்தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. டெங்கு அறிகுறி தென்பட்ட உடனேயே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களை நாங்கள் காப்பாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement