Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நடராசன் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் தவறுக்கு வாய்ப்பில்லை': அமைச்சர் விளக்கம்

'நடராசனுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டதில் தவறு நடந்திருக்க வாய்ப்பில்லை' என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். 


உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் நடராசனுக்கு, சென்னை புறநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், விதிமீறல்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு எனத் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தேகம் எழுப்பியிருந்தார். 

இந்த விவகாரம்குறித்து சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், ‘'உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலம் தமிழகம்தான். இதில், கின்னஸ் சாதனைகூட நாம் படைத்துள்ளோம். அந்த அளவுக்கு நிர்வாக ரீதியில் சிகிச்சை முறைகளுக்கான விதிமுறைகளை நாம் வலுப்படுத்தி வைத்திருக்கிறோம். உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்கான சட்டம் தமிழகத்தில் கடுமையாக இருப்பதால், நடராசனுக்கு நடந்த உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் தவறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதே எனது கருத்து'' என்று தெரிவித்தார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement