Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தி.மு.க கடையில் டீ குடித்த சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனைபெற்றுவந்த சசிகலா, இன்று தன் கணவரைப் பார்க்க பரோலில் வந்துள்ளார். தினகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று, சசிகலாவை அழைத்துவந்தார்கள்.

சசிகலா

இன்று காலை 8 மணிக்கு விமானம்மூலம் சென்னை அழைத்துவரும் முடிவில் இருந்தார் தினகரன். காரில் சென்றால் தொண்டர்களின் வரவேற்பைப் பெறமுடியும். அதேபோல பேசிக்கொண்டுவருவதற்குப் பிரச்னை இருக்காது என்பதால், கடைசி நேரத்தில் காரில் பயணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் ஒரு காரிலும், புகழேந்தி, ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ  மொளச்சூர் பெருமாள் உள்ளிட்டவர்கள் இன்னொரு காரிலும் ஏறிக்கொண்டார்கள். சிறை வளாகத்துக்குள் சுமார் 10 கார்கள் சென்றன. சிறை வளாகத்தை விட்டு ஒரு கி.மீ தாண்டியதும், கார்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஓசூர் வந்ததும் அங்கே காரை நிறுத்தி டிபன் சாப்பிட்டார் சசிகலா.  ராணிப்பேட்டை வந்ததும் ஒரு டீ சாப்பிட வேண்டும் என்றார். அங்கே ஒரு டீ கடைக்கு அருகில் காரை நிறுத்தி டீ வாங்கச் சென்றிருக்கிறார்கள். அந்த டீ கடையில் தி.மு.க தலைவர்களின் படங்கள் இருந்துள்ளன. தி.மு.க கடை டீ என்று தெரிந்தும் மறுப்பு ஏதும் சொல்லாமல் அந்தக் கடையிலிருந்து வாங்கிவந்து கொடுத்த டீயை காரிலிருந்தே குடித்தார் சசிகலா. இரவு 7.05 மணிக்கு காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதிக்கு வந்தார் சசிகலா. மொளச்சூர் பெருமாள் தலைமையில் அவருக்கு பூசணிக்காய், எலுமிச்சை, தேங்காய் என திருஷ்டி சுற்றினார்கள் அ.தி.மு.க-வினர். அவற்றைப் புன்னகையோடு ஏற்றுக்கொண்டு புறப்பட்டார் சசிகலா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement