'சுடுகாட்டுக் கொட்டகை அமைத்துத் தாருங்கள்!' - ஆட்சியரிடம் உருக்கமான மனு

கன்னியாகுமரி மாவட்டம், தெங்கம்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கலெக்டர் காலனி மற்றும் கலைஞர் காலனி மக்கள் ஒன்றாகத்திரண்டு வந்து, குமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு  ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், '1997-ம் ஆண்டு ஒரு எஸ்டேட்டில் கொத்தடிமைகளாக இருந்த எங்களை, அப்போதைய கலெக்டர் மீட்டு, கன்னியாகுமரி மாவட்டம், தெங்கம்புதூர் பேரூராட்சியில் கலெக்டர் காலனி மற்றும் கலைஞர் காலனியில் குடி அமர்த்தினார். இங்கு, சுமார் 150 வீடுகள் உள்ளன. யாராவது இறந்தால், சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சடலத்தைக் கொண்டுசென்றுதான் தகனம் செய்யவேண்டிய நிலை உள்ளது.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சுடுகாட்டுக் கொட்டகை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடுசெய்த பின்னரும் திட்டம் செயல்படுத்தாத அவலநிலை உள்ளது. எனவே, தெங்கம்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட ஓனாச்சி கிடங்கில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாட்டுக் கொட்டகை அமைக்க இடம் ஒதுக்கித் தர வேண்டும். அதற்கு, துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!