Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரதமர் மோடி குறித்த விமர்சனம்-நடிகர் பிரகாஷ்ராஜ் மீதான வழக்கில் இன்று விசாரணை

பிரதமர் மோடியை விமர்சித்ததாக, நடிகர் பிரகாஷ்ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பான முதல் விசாரணை, இன்று லக்னோ நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

பிரகாஷ்ராஜ்

பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரகாஷ்ராஜ், பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மோடி மௌனம் காப்பது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியிருந்தார். மேலும், தனது தேசிய விருதுகளைத் திரும்ப அளிக்கத் தயங்கமாட்டேன் என்றும் பிரகாஷ் ராஜ் கூறியிருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், தேசிய விருதுகளைத் திரும்ப அளிப்பதாக எந்த இடத்திலும் தான் கூறவில்லை என்று விளக்கம் அளித்த அவர், ’பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக பிரதமர் மோடி, தனது கண்டனத்தையோ கருத்தையோ பதிவுசெய்யாதது ஏன்? நாட்டின் குடிமகன் என்கிற முறையில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது எனக்கு வலியையும் வேதனையையும் பயத்தையும் அளிக்கிறது.

நான் எந்தவொரு கட்சியையும் சாராதவன். நான் எந்தவொரு கட்சியைச் சேர்ந்தவரைப் பற்றியும் பேசவில்லை. நாட்டின் குடிமகன் என்கிற முறையில், பிரதமரிடம் நான் கேள்வி கேட்கிறேன். இதைக் கேட்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது’ என்று கூறியிருந்தார். இந்தக் கருத்துகள்மூலம் பிரதமருக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் ஒருவர் லக்னோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement