Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பூரில் 10 வயது சிறுமி காய்ச்சலால் பலி..!

Tiruppur: 

திருப்பூர் மாவட்டம் கடத்தூர் என்னும் பகுதியில், வசித்துவருகிறார்கள் மணியன்- ரேவதி. இந்தத் தம்பதியின் 10 வயது பெண் குழந்தை கரண்யாவுக்கு, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் உடல்நிலை மிக மோசமான நிலைமையில் இருந்ததால், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

எனவே, சிறுமி கரண்யாவை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்துள்ளனர். கடந்த சில நாள்களாக, சிறுமியை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்றைய தினம் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இதனால் வேதனையடைந்த சிறுமியின் பெற்றோர், கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் தங்களின் மகள் இறந்துபோனதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். மருத்துவமனையில் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோது உரிய சிகிச்சை அளிக்காமல், மருத்துவமனை ஊழியர்கள் கவனக்குறைவாக இருந்ததால்தான் தங்களின் மகளை இழந்துவிட்டோம் என்றும், முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், எங்களின் மகளை நிச்சயமாக மீட்டிருக்க முடியும் என்றும் வேதனைப்படுகின்றனர் பெற்றோர்.

சிறுமியின் மரணம்குறித்து மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, சிறுமி கரண்யாவை சிகிச்சைக்காக அனுமதித்தபோதே, அவர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில்தான் இருந்தார். இருப்பினும் தொடர்ந்து முயற்சித்தபோது, சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றனர். ஆனால், மூளைக்காய்ச்சலால்தான் சிறுமி இறந்துபோனார் என்று மருத்துவமனை சார்பில் இறப்புச் சான்றிதழ் தரப்படவில்லை என்றும் பெற்றோர் தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் தினந்தோறும் டெங்கு உட்பட பல்வேறு வைரஸ் காய்ச்சல்களால் அப்பாவிக் குழந்தைகளின் உயிர் பறிபோய்க்கொண்டே இருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement