Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவர்… வேதனையில் மனைவி தற்கொலை

செங்கல்பட்டை அடுத்த பேரமனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி தமிழ்அழகன். இவர், நேற்று வெளியில் சென்று இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது, அவரை இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். பைக்கில் வந்த நால்வரும் அவரைக் கொலைசெய்ய முற்பட்டதால், தனது வீட்டுக்குள் ஓடினார் தமிழ்அழகன். வீட்டுக்குள் நுழைந்தவரை அந்தக் கொலைக்கும்பல் சரமாரியாக வெட்டியது. தன் கண் எதிரே கணவர் சிதைக்கப்படுவதைக் கண்டு அவரது மனைவி வேணி அதிர்ச்சியுற்றார். சம்பவ இடத்திலேயே தமிழ்அழகன் உயிர் இழந்தார். இரவு நேரத்தில், அந்தப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அச்சிறுப்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் சீனுவாசன் கொலைவழக்கு, வணிகர் சங்க உறுப்பினர் ஊரப்பாக்கம் விஜயராஜ் என்பவரது கொலை வழக்கு எனப் பல முக்கிய கொலைவழக்கில் இவருக்கு தொடர்பு இருக்கிறது. மேலும் வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 17 வழக்குகள் இவர்மீது நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், மனம் உடைந்த அவரது மனைவி இன்று அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement