Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“டெங்கு வந்துவிட்டது, குப்பையை அள்ளுங்க”- களத்தில் இறங்கிய மாணவிகள்!

எப்போதும் குப்பை மேடாகவே காட்சியளிக்கும் நகரம் செங்கல்பட்டு. இங்கு தெருக்களில் உள்ள குப்பைகளை முறையாக அள்ளப்படுவது கிடையாது. தெருக்களில் குப்பை நிறைந்திருப்பதால், டெங்கு போன்ற வைரஸ் நோய்கள் மக்களுக்குப் பரவுகின்றன. இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி சார்பில் அடிக்கடி போரட்டம் வெடிக்கும். ஆனாலும், இதைப் பற்றியெல்லாம் நகராட்சி கண்டுகொள்வதே இல்லை. இந்த நிலையில், இன்று செயின்ட் மேரிஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள், தூய்மையை வலியுறுத்தி செங்கல்பட்டு நகரம் முழுவதும் ஊர்வலமாகச் சென்றனர். துண்டுப்பிரசுரங்களைக் கொடுத்தும், கோஷங்கள் எழுப்பியும் பொதுமக்களிடையே விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள் மாணவிகள்.

டெங்கு

“கல்விக்கூடங்களை அமைத்தோம். பெரிய பெரிய கடைகளைக் கம்பளம் விரித்து வரவேற்றோம். இப்போது, தூய்மையை இழந்திருக்கிறோம். வருங்கால சந்ததியினருக்குத் தூய்மையான நகரை விட்டுச்செல்ல வேண்டும். பிளாஸ்டிக்கை தடைசெய்ய வேண்டும். குப்பைகள் அதிகமாக இருப்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் அதிகரித்துவிட்டது. இதனால், குப்பைகளைக் கண்ட இடங்களில் கொட்டக்கூடாது” என்பதை வலியுறுத்தி, விழிப்புஉணர்வுப் பேரணி நடத்திவருகிறோம்'' என்கிறார்கள் மாணவிகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement