Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கம்போடியாவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஸ்ரீதர்!

காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர் தற்கொலைக்குப் பின்னர், அவரைப் பற்றிய அந்தரங்கத் தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன. காஞ்சிபுரம் முழுக்கவே ஸ்ரீதரைப் பற்றிய பேச்சுதான் பரபரத்துக்கொண்டிருக்கிறது.

ஸ்ரீதர் கம்போடியா

காவல்துறையினரின் நெருக்கடியால், 2013ல் துபாய்க்கு தப்பியோடினார் ஸ்ரீதர். பிறகு, அங்கு இன்டர்போல் போலீஸார் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். ஸ்ரீதரை இந்தியாவுக்குக் கொண்டுவர தமிழகக் காவல்துறையால் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதனால் சிறையிலிருந்து வெளியேறினார் ஸ்ரீதர். பிறகு, அங்கேயே சுகபோகமாக வாழ ஆரம்பித்தார். காவல்துறை தன்னை எப்படியும் நெருங்கிவிடக்கூடும் என்ற அச்சம் ஸ்ரீதருக்கு ஏற்பட்டது. அதனால், போலி பாஸ்போர்ட் மூலம் கம்போடியா தப்பிச்சென்றார். அங்கு, தமிழ் பேசும் பெண் ஒருவருடன் ஸ்ரீதருக்கு தொடர்பு ஏற்பட்டது. அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்கு ஒரு வீட்டை வாங்கினார். அந்தப் பெண்ணையும் தன்னுடன் தங்கவைத்துக்கொண்டார். இருவருக்கும் குழந்தை ஒன்று உள்ளது. கம்போடியாவில் அவருக்குச் சொந்தமான நிலங்களும் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஸ்ரீதரின் மகன்,  இரண்டு மகள்கள், மனைவி என குடும்பத்தினர் அனைவர்மீதும் வெளியில் தவறான தகவல் பரவியது. இவையெல்லாம் ஸ்ரீதருக்குத் தெரியவந்தது. ஸ்ரீதர் குடும்பத்துடன் ஏற்பட்ட விரிசலே தற்கொலைக்குக் காரணமாக அமைந்தது என்கிறார்கள். இந்த நிலையில், ஸ்ரீதர் பற்றிய தகவல்கள் காஞ்சிபுரம் பகுதி மக்களிடையே கசிந்தவண்ணம் உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement