Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிவகங்கை மக்களை மிரட்டும் டெங்கு! ஒரே நாளில் மூன்று பேர் பலி!

   

 

சிவகங்கை மாவட்டத்தில், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒரே நாளில் மூன்று பேர் டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகியிருக்கிறார்கள். சிவகங்கை சுகாதாரத்துறை  இணை இயக்குநர், துணை இயக்குநர் மருத்துவக் கல்லூரி டீன்   ஆகியோர் கூட்டாக அறிக்கை கொடுத்தார்கள். அன்றிலிருந்தே அடுத்தடுத்து டெங்கு பலி அதிகரித்துக்கொண்டேவருகிறது. ஆக, அதிகாரிகளின் பொய்யான அறிக்கை, டாக்டர்களின் அலட்சியம் போன்றவைகளால்தான் அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழக்கவேண்டியிருக்கிறது. அரசாங்கம் எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுப்பதில்லையே ஏன் என்கிற கேள்வியை சமூக அமைப்புகள் தொடுத்திருக்கிறார்கள்.  மற்றும்  மர்மக்காய்ச்சலுக்கு மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் இறந்துபோயிருப்பது மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 


காரைக்குடி அருகேயுள்ள கல்லல் மாலைகண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகள் (11)காவியா, கல்லல் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவந்தார். ராஜ்குமார், வெளிநாட்டில் இருக்கிறார். காவியாவுக்கு தொடர்காய்ச்சல் ஏற்பட்டதால், காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். டெங்கு காய்ச்சல் மூளையைப் பாதித்து இறந்துபோனார்.
காரைக்குடி அருகேயுள்ள கல்லலைச் சேர்ந்தவர்கள், மணிமாறன்-மீனாள் தம்பதியினர். இவருடைய மகன் மகேஸ்வரன், ஆறாம் வகுப்பு படித்துவருகிறார். இந்த மாணவன், டெங்கு காய்ச்சலுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் கடந்த ஏழு நாட்களாக சிகிச்சைபெற்று வந்தநிலையில், நேற்று உயிரிழந்தார். இந்த மாணவர்களின் இறப்பு, காரைக்குடி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தேவகோட்டை ரஸ்தாவைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவர், சிவகங்கை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கடந்த எட்டு நாட்களாக சிகிச்சைபெற்றுவந்தார். இவருடைய குடும்பத்தார், முறையான சிகிச்சை இல்லாததால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கிறது..என்கிறார்கள்.அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் வந்தால் அரசு மருத்துவமனைக்கு போகச்சொல்லுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர். இங்கே வந்தால், உயிரைப் பறிக்கிறார்கள். அரசு மருத்துவமனையை நம்பி வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. கடைசியில், எங்கள் வீட்டு உயிர் போனதுதான் மிச்சம். மருத்துவமனை நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று கொடுக்க முடியும் என்கிறார்கள்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement