Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகம் சுற்றும் செட்டிநாடு கைமுறுக்கு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், செட்டிநாடு பலகாரம் என்றாலே அதற்கென்று தனி மவுசும் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். செட்டிநாடு கட்டடக்கலைக்கு மட்டும் புகழ்பெற்றது இல்லை. பலகார வகைகளுக்கும் கடல் தாண்டி விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறது இதன் பெருமை. அந்த அளவுக்குப் புகழ்பெற்று விளங்கிக்கொண்டிருக்கிறது, செட்டிநாடு பலகாரம். செட்டிநாடு பலகாரங்கள் பட்டியலில், தேன்குழல் முறுக்கு, கைமுறுக்கு, சீப்புச்சீடை, பாசிப்பருப்பு உருண்டை, பொடிசீடை, மனோலம், அதிரசம், எள்ளுஅடை எனச் சிறப்புப் பலகாரங்களின் பட்டியல் நீண்டது.

கைமுறுக்கு

செட்டிநாடு பலகாரத்தின் தோற்றமே ஒரு வரலாறுதான். அந்தக் காலத்தில் செட்டிநாடு வீடுகளில் ஆச்சிமார்கள் பலகாரம் செய்வதற்கென்றே ஆட்கள் வைத்திருப்பார்கள். அந்த மாதிரியான ஆட்களுக்கு, ஒவ்வொரு பலகாரம் செய்வதற்கான செய்முறைகளை கற்றுக்கொடுத்தார்கள். ரெகுலராகவே செட்டியார் வீடுகளில் கருப்பட்டிப் பணியாரம், குழிப்பணியாரம், வெள்ளைப் பணியாரம், மசாலா பணியாரம் எனத் தயார்செய்வது வழக்கமான ஒன்று. அப்போதைய ஃபேமஸ் கந்தரப்பம் அதாவது அரிசி பருப்பு வகைகள், வெந்தயம் சேர்த்துச் செய்யப்படுவது. இவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றதுதான் இன்றைக்கு பல்வேறு வகையான செட்டிநாடு பலகாரங்கள்.

இங்கு தயாரிக்கக்கூடிய பலகாரங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். ஆகையால்தான் வெளிநாடுகளுக்கு நம்பிக்கையோடு அனுப்பிவருகிறார்கள். அதற்கான ரகசியம் பற்றி விவரிக்கிறார், அலமேலு ஆச்சி.       “ரகசியமெல்லாம் ஒண்ணும் இல்லைங்க. எல்லாமே பலகாரம் செய்யும் மாஸ்டர் கையில்தான் இருக்கிறது அந்த மந்திரம்.  சரியான கைப்பக்குவம்தான் அந்த மந்திரம். அதே நேரத்தில், சுத்தமான ரீஃபைண்ட் ஆயில். ஒருமுறை பயன்படுத்தியதை மறுமுறை பயன்படுத்துவதில்லை. இதுவும் தரத்துக்கு முக்கியப் பங்குவகிக்கிறது. இதனால்தான் எங்க பலகாரம் எப்பவுமே விமானத்துல பறந்துக்கிட்டே இருக்கிறது’ என்கிறார் அவர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement