Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தூத்துக்குடியில் தாமிரபரணி ஆற்றில் தூய்மைப்பணிகள் துவக்கம்!

cleaning work started in thamiraparani

தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகளை ஆட்சியர் வெங்கடேஷ் துவக்கிவைத்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தில், சுமார் 30 கி.மீ தூரம் தாமிரபரணி ஆறு பாய்ந்து ஓடுகிறது. இதனால், 46 ஆயிரம் ஏக்கர் பாசன நிலம் பயன்பெறுகிறது.  இதில், மருதூர் அணைக்கட்டுப் பகுதியிலிருந்து ஆத்தூர் வரையுள்ள தாமிரபரணி ஆற்றின் இரு ஓரங்களிலும் அமலைச்செடிகளும் சீமைக்கருவேல மரங்களும் சூழ்ந்து  காணப்படுவதால், ஆற்றின் வளம் அழிந்து மாசுபட்டுவருகிறது. இதை தடுக்கும் விதமாக, ஆற்றங்கரைகளில் சூழ்ந்துள்ள அமலைகள் அகற்றும் பணியையும், ஆற்று ஓரங்களில் மரக்கன்று நடும் பணியையும் ஆட்சியர் வெங்கடேஷ் துவக்கிவைத்தார். 

tree plantation

 

இதுகுறித்துப் பேசிய அவர், " நமது மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள சீமைக்கருவேலமரங்கள் மற்றும் அமலைச்செடிகளை அகற்றும் பணியை முதல்கட்டமாகத் துவக்கியுள்ளோம். இது, முறப்ப நாட்டில் துவங்கி ஆத்தூர் வரை நடக்கிறது. இதேபோல ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து ஆத்தூர் வரை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரம் அகற்றும் பணி இன்னும் ஒரு மாதத்தில் துவக்கப்படும். 

students participated in cleaning work

ஆற்றின் கரையோரங்களிலும், வாகைக்குளம் - வல்லநாடு வரை சாலை ஓரங்களிலும் 'மரம் நடுவோம் மண்ணுயிர் காப்போம்' திட்டத்தின்படி, 1 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள்  நட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக, 3 ஆயிரம் மரக்கன்றுகள் இன்று நடப்பட உள்ளன. தாமிரபரணியில் சாக்கடைக் கழிவுகளைக் கலப்பவர்கள் மீதும், சட்டவிரோதமாக ஆற்றங்கரையில் மணல் அள்ளுபவர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இந்தப் பணியில் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் ஊர்மக்களும் இணைந்து செயல்பட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement