கொலை முயற்சி வழக்கில் துணைவேந்தருக்கு ஆதரவாக போலீஸ்!

கொலை முயற்சி  வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான காமராசர் பல்கலையின் முன்னாள் இந்நாள் துணைவேந்தர்களைத் தப்பிக்க வைக்க காவல்துறை செயல்பட்டு வருகிறது என்ற புகார் கிளம்பியுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செல்லத்துரை பதவியேற்ற நாள் முதல் சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறார். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் பேராசிரியர் சீனிவாசன்,

மதுரைகாமராசர்

''நான் காமராசர் பல்கலையில் பணியாற்றி ஓய்வு பெற்றபின், ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும், பல்கலைக்கழக பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டேன். அப்போது பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல், முறைகேடுகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியதால், கூலிப்படையால் கடுமையாகத் தாக்கப்பட்டேன். இவ்வழக்கை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் விசாரணை செய்தது. என்னைக் கொலை செய்ய கூலிப்படையை ஏவியவர்கள் அப்போது துணைவேந்தராக இருந்த கல்யாணிமதிவாணன், இளைஞர் நலத்துறை இயக்குநராக இருந்த செல்லத்துரை (தற்போதைய துணைவேந்தர்) உட்பட கூலிப்படையினர் சம்பந்தப்பட்டிருந்தனர். 

மரணத்தின் வாசலுக்குச் சென்று பிழைத்து வந்தேன். இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் முன்ஜாமீன்கூட வாங்காமல், விசாரணைக்கும் செல்லாமல் தங்கள் அலுவல்களைச் செய்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் முறையிட்டோம். உடனே வழக்கை விசாரிக்கும்படி உத்தரவிட்டும், காவல்துறை இவ்வழக்கில் சுணக்கம் காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த வழக்கின் சாட்சிகளையும், வாக்குமூலம் அளித்தவர்களையும் மிரட்டி, கல்யாணிமதிவாணன், செல்லத்துரைக்கு ஆதரவாக வழக்கை முடிக்க பார்க்கிறார்கள், இந்த அநியாயத்துக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளேன் '' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!