மோடியால் இந்தியப் பொருளாதாரம் பின்னோக்கி சென்றுவிட்டது- தா.பாண்டியன்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர்  தா.பாண்டியன் பத்திரிகையாளர்களை சந்திதார். அப்போது, "மோடி தலைமையிலான  மத்திய அரசு அமைந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியையும் பதவியேற்ற பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காததைப் பார்த்தால் இந்தியா பின்னோக்கி இருக்கிறது. இரண்டு லட்சத்து முப்பதாயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் ஹவாலா நடத்தி வந்த நிறுவனங்கள் என்று சொல்கிறார்கள்.

நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டதால்15 லட்சம் பேர் வேலையிழந்திருக்கிறார்கள். இதனால் இந்தியாவின் உற்பத்தி குறைந்திருக்கிறது. இந்தியாவில் ஆச்சர்யப்படுத்தும் வகையில் நடுத்தர தொழிற்சாலைகளால் 41 சதவிகிதம் பேருக்கு வேலை கொடுக்கிறார்கள். பெரிய தொழிற்சாலைகள் 13 சதவிகிதம் பேருக்குதான் வேலை கொடுக்கிறது. தற்போது இந்தியாவில் ஏற்றுமதி இறக்குமதியில் வேலைவாய்ப்பு  குறைந்திருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைந்துபோய்விட்டது.

மத்திய அரசின் பிரதிநிதியாகத் தமிழக அரசு செயல்படுகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தமிழகத்துக்குப் புதிதாக வந்திருக்கும் ஆளுநர் சரியாகச் செயல்படுவார் என்று நம்புகிறோம். சுகாதாரத்துறையின் செலவு கணக்குகளைக் கண்காணிக்க அனைத்துக் கட்சிகள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும். சசிகலா கணவர் நடராசனுக்கு மாற்று உறுப்பு அறுவைசிகிச்சை செய்ததில் உறுப்பு தானத்தில் பிரச்னைகளோ விதிமீறல்களோ நடந்திருந்தால்  வழக்குப்போடலாம். இது சம்பந்தமாக எனக்கு எதுவும் தெரியவில்லை'' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!