டெங்குவைப் பற்றி செய்தி எடுக்கக் கூடாது ! மிரட்டும் மேலூர் டாக்டர் ! | dont take dengue spreads news melur doctor say hard

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (07/10/2017)

கடைசி தொடர்பு:21:00 (07/10/2017)

டெங்குவைப் பற்றி செய்தி எடுக்கக் கூடாது ! மிரட்டும் மேலூர் டாக்டர் !

 

 

டெங்கு

மதுரை மாவட்டம் மேலூர்ப் பகுதி பல கிராமங்களை உள்ளடக்கிய பெரும் தொகுதி. இங்கு குவாரி பிரச்னை காரணமாக அதிக அளவு டெங்கு பரவும் அபாயம் இருந்துவருகிறது. சில ஆண்டு முன் வரலாறு காணாத டெங்கு பாதிப்பு ஏற்பட்டு போர்க்கால அடிப்படையில் டெங்கு கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா முகாமிட்டு டெங்குபாதிப்பைக் கட்டுப்படுத்தினார். தற்போது தொடர்ச்சியாக மேலூர் பகுதியில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலூரில் போதுமான வசதி இருந்தும் அவர்களைக் கவனித்து சிகிக்கை அளிப்பதை விடுத்து சிகிச்சைக்கு வரும் பல நோயாளிகளையும் மதுரை அரசு மருத்துவமனைக்குப் போகச்சொல்லி எழுதி அனுப்பப்படுகிறது. இதனால் மதுரை இராஜாஜி மருத்துவமனை நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது . மேலூரில் ஏற்படும் டெங்கு பிரச்னை தொடர்பாக செய்தி சேகரிக்க மேலூரைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் டெங்கு பாதிக்கப்பட்டவர்களைப் புகைபடம் எடுத்துள்ளார் .

டெங்கு

அப்போது அங்கிருந்த அரசு மருத்துவர் சக்தி அண்ணாமலை பத்திரிகையாளரின் செல்போனை பிடிங்கி யாரைக் கேட்டு நீ புகைப்படம் எடுக்கிறாய்? யார் உனக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது. டெங்கு பாதிப்பு பற்றி செய்தி சேகரிப்பதற்கு எங்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும் இல்லை என்றால் போலீஸில் புகார் செய்துவிடுவேன் என்று ஒருமையில் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளரை மிரட்டல் விடுத்த தகவல் மேலூர் முதன்மை மருத்துவ அலுவலர் ஜீவ ஜோதி அவர்களுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் பிரச்னையில் விசாரணை நடத்தப்பட்டு துறைரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பத்திரிகையாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .