Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசு இயந்திரத்தை மோடி அரசு தவறாகப் பயன்படுத்துகிறது: எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு

அரசு எந்திரத்தை மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தவறாகப் பயன்படுத்துவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

எஸ்டிபிஐ

 

பாப்புலர் ப்ரென்ட் ஆஃப் இந்தியா நடத்தும் உரிமை முழக்க மாநாட்டில் கலந்துகொள்ள எஸ்.டி.பி.ஐ.யின் தேசிய தலைவர் சயீத் மதுரை வந்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ’வளர்ச்சி, ஊழல்,கருப்புப் பணம் ஒழிப்பு போன்ற உறுதிமொழிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த மத்திய அரசு, பொருளாதாரத்தில் நாட்டை கடும் வீழ்ச்சியடையச் செய்துள்ளது. அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்வுதான்  நாட்டின் வளர்ச்சி ஆகிவிட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசு  எந்திரத்தை தவறாக  பயன்படுத்தி,  அரசுக்கு எதிராக போரடும் சமூக ஆர்வலர்களை பழிவாங்குகிறார்கள். பி.ஜே.பி.யின் மூத்த தலைவர்களே, மோடி அரசின் தவறான பொருளாதார நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக கூறியிருப்பது குறிப்பிடதக்கது.

பி.ஜே.பி. எம்.எல்.ஏ. ஒருவர் கூட தமிழகத்தில் இல்லாத சூழ்நிலையில் தமிழக அரசை வருமான வரித்துறை, மற்றும் சி.பி.ஐ. கொண்டு மிரட்டுகிறது மத்திய அரசு. எப்போதும் இல்லாத அளவில் தற்பொழுது மதரீதியான தாக்குதல் அதிகளவில் நடைபெற்று வருகிறது. பி.ஜே.பி.யின் கொள்கையை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்கள்,முற்போக்காளர்கள் கொல்லப்படுகிறார்கள். நம் நாட்டின் அச்சாரமே மதசார்பற்றதன்மையும், சகிப்புத்தனமையும்தான். இதை வைத்து நாட்டை முன்னேற்றாமல், அதன் அடித்தளத்தையை வலுவிழக்க செய்யும் வேலைகளில் பி.ஜே.பி. அரசு செயல்பட்டு வருகிறது’ என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement