Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரையை உலுக்கும் பழிக்குப்பழி கொலைகள்!

மதுரையில் திமுகவின் முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமியும், அ.தி.மு.க.வின் முன்னாள் மண்டலத் தலைவர் ராஜபாண்டியும் இரண்டு கோஷ்டிகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

சடையாண்டி

 

கடந்த இருபது ஆண்டுகளாக மாறி,மாறி இருதரப்பிலும் கொலைகள் நிகழ்வது வாடிக்கையாக நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. இதன் உச்சமாக சில மாதங்களுக்கு முன் ராஜபாண்டியின் மகன், கமுதி அருகே கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் குருசாமியின் உறவினர் சடையாண்டி நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது ராஜபாண்டி மகன் கொலைக்கு பதில் கொலை என்று சொல்லப்படுகிறது. சடையாண்டி மீது சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.

 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரத்திலிருந்து மதுரைக்கு வந்து செட்டிலான வி.கே. குருசாமி, தொடக்கத்தில் அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என்று வளர்ந்து, தி.மு.க.வில் கவுன்சிலராகி, மண்டலத் தலைவரகவும் பதவி வகித்தார். ராஜபாண்டியும் அதே ரூட்டில் வளர்ந்து அ.தி.மு.க.வில் மண்டலத்தலைவராக பொறுப்பு வகித்தார். கீழ் மதுரைப்பகுதியில்  இப்படி வளர்ந்த இரண்டு கோஷ்டிக்குள்ளும் ஈகோவும், பழிக்குப்பழி உணர்ச்சியும் பெரிய அளவில் வளர்ந்து மாறி, மாறி கொலைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. வழக்கு சிறை எதைப்பற்றியும் கவலைப்படாமல் இந்த கோர நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement