பரமக்குடி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அன்வர்ராஜா எம்.பி.,

ரமக்குடி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா இன்று ஆய்வுசெய்தார்.

பரமக்குடி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அன்வர்ராஜா

எதிரும் புதிருமாக இருந்த ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிகளே இணைந்துவிட்ட நிலையில் ஒரே அணியில் இருக்கக் கூடிய ராமநாதபும் எம்.பி அன்வர்ராஜாவும், அமைச்சர் மணிகண்டனும் இன்னும் ஒருவருக்கு ஒருவர் எதிர் எதிர் திசைகளிலேயே பயணித்து வருகின்றனர். அன்வர்ராஜாவை உதாசினப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் நடக்கும் அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் அமைச்சர் மணிகண்டன் தாமதமாக வந்து கலந்துகொள்வதும், அந்த நிகழ்ச்சிகளில் மாவட்டத்தில் நடக்கும் அத்தனை வளர்ச்சிப் பணியுமே தன்னால்தான் நடப்பதாக அன்வர்ராஜாவை அருகில் வைத்துக்கொண்டே அமைச்சர் கூறுவதும், இதற்கு மறுப்பு தெரிவித்து அப்போதே அன்வர்ராஜா பேசுவதும் வாடிக்கையாகி வருகிறது. 

சமீபத்தில் ராமநாதபுரத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் அமைச்சர், 'ரயில்வே திட்டங்கள் மாவட்டத்துக்கு வர தான் தான் காரணம்' என பேசினார். பின்னர் பேச வந்த அன்வர்ராஜா இதை மறுத்ததுடன் அமைச்சருக்கு எதிராக கடுமையாகப் பேசினார். இந்நிலையில், இன்று பரமக்குடி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் பிளாட்பார மேற்கூரை அமைக்கும் பணிகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் எம்.பி அன்வர்ராஜா  தனது ஆதரவாளர்களுடன் சென்று ஆய்வுசெய்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!