இடையமேலூரில் தூய்மைப் பணியை மேற்கொண்ட ஆட்சியர்!

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் மற்றும் இடையமேலூர் ஊராட்சியில், தூய்மை சேவை மற்றும் டெங்கு ஒழிப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் லதா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், இடையமேலூர் ஊராட்சியில் பொது சுகாதாரத்துறை மற்றும் உதவி இயக்குநர் பஞ்சாயத்து அலுவலகம் இணைந்து நடத்திய தூய்மைப் பணி மற்றும் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பணிகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்  பேசும்போது,

"தூய்மை மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 1.10.2017 முதல் 15.10.2017 வரை கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம் நடைபெறுவதைத் தொடர்ந்து, இடையமேலூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து விதமான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் மருத்துவர்கள், 100 நாள் வேலைப் பணியாளர்கள், டெங்கு களப் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், தேசிய நாட்டு நலப்பணியைச் சேர்ந்த மாணவர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் விநாயக கேஸ் ஏஜென்சி பணியாளர்கள் உள்ளிட்ட 500 நபர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் 7 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 7 இடங்களில் ஒட்டு மொத்த துப்புரவுப் பணிகள், ஏடிஸ் கொசுப் புழு ஒழிப்புப் பணிகள், புகை மருந்து அடித்தல், நிலவேம்புக் கசாயம் வழங்குதல், காய்ச்சல் சிகிச்சை முகாம், அபேட் மற்றும் பிளிச்சிங் பவுடர் தெளித்தல் போன்ற பணிகளை மேலூர் சாலை, மேலூர் சாலை கிழக்கு, எஸ்.சி.காலனி, கிராம உதவியாளர் தெரு (தலையாரி தெரு), வங்கி தெரு, அஞ்சலக அலுவலக தெரு, சாலூர் சாலை, முள்ளிப்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் மேற்கொண்டனர்" என்றார்.

முன்னதாக, சுகாதார உறுதிமொழியை மாவட்ட ஆட்சித் தலைவர் வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!