வெளியிடப்பட்ட நேரம்: 07:54 (08/10/2017)

கடைசி தொடர்பு:09:58 (09/10/2017)

தமிழக மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு 

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மீனவர்கள்


சர்வதேசக் கடல் எல்லைப் பகுதியில், நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் பத்து பேர் நேற்றிரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் அங்குவந்தனர். தமிழக மீனவர்களிடம் விசாரணை நடத்திய அவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள் எனக்கூறி, அவர்கள் பத்து பேரையும் உடனடியாகக் கைதுசெய்தனர். அவர்களது படகும் சிறைபிடிக்கப்பட்டது. பின்னர், தமிழக மீனவர்களை காங்கேசன் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க