Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலங்கையில் உள்ள படகுகளை மீட்க மூன்று நாள் காத்திருப்பு!

மூன்று நாள்கள் காத்திருப்புக்குப் பின் இலங்கையில் உள்ள படகுகளை மீட்க நாகை மாவட்ட மீனவர்கள் புறப்பட்டுச் சென்றனர். 
இலங்கைக் கடற்படை எல்லை தாண்டும் தமிழக மீனவர்களின் படகுகளைத் தொடர்ந்து சிறைபிடித்து வருகிறது. இந்நிலையில், மீனவர்களின் போராட்டத்தின் காரணமாக மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து முதல் கட்டமாக 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு சம்மதித்தது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட படகுகளில் 10-க்கும் மேற்பட்ட படகுகள் மிக பழுதடைந்த நிலையில் மீட்டு வர முடியாத நிலையில் உள்ளன. எஞ்சிய 32 படகுகளை மீட்டு வர ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்ட மீனவர்கள் பல கட்டங்களாக இலங்கை சென்றுவருகின்றனர்.


 

இதுவரை 3 குழுக்கள் படகுகளை மீட்க இலங்கை சென்ற நிலையில் 4-வது குழுவாக நாகை மாவட்டத்தைச் சேர்ந்ந மீனவர்களுக்கு கடந்த 5-ம் தேதி இலங்கை செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து நாகையில் இருந்து மண்டபத்துக்கு வந்த மீனவர்களை இலங்கைக்கு அழைத்துச் செல்ல இந்திய கடலோர காவல் படையினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் கடந்த 3 நாள்களாக மண்டபம் கடற்கரையில் நாகை மாவட்ட மீனவர்கள் 40 பேர் படகுகளுடன் காத்துக்கிடந்தனர். 

இந்நிலையில், இன்று காலை நாகை பகுதி மீனவர்களின் படகுகளை மீட்டு வருவதற்காக இந்திய கடலோர காவல் படையினர் மண்டபத்தில் இருந்து அழைத்துச் சென்றனர். இவர்கள் இலங்கையில் உள்ள காரைநகருக்குச் சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட 6 படகுகளை மீட்ட பின்னர் இரு நாள்களில் ஊர் திரும்புவர் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement