வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (08/10/2017)

கடைசி தொடர்பு:08:55 (09/10/2017)

'விருப்பு வெறுப்புகளை கட்டுப்படுத்திக்கொண்டு பணியாற்றுகிறேன்' - சசிகலா பற்றி செல்லூர் ராஜூ

’அமைச்சர் என்ற பொறுப்பில் இருப்பதால் மனதில் உள்ளவற்றை கூற முடியாது. என் தனிப்பட்ட கருத்துகளை, விருப்பங்களை வெளிப்படுத்துவது சரியாக இருக்காது’ என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜு

மதுரையில் மருத்துவ முகாமை திறந்துவைத்த பின் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ’முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவின் உதவியோடு அ.தி.மு.க மீண்டும் ஆட்சி அமைத்தது. நாங்கள் நன்றி மறக்க மாட்டோம். ஆனால், அமைச்சர் என்ற பொறுப்பில் இருப்பதால் ஆட்சி தொடர என் விருப்பு வெறுப்புகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு பணியாற்றுகிறேன்.

அமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கிறேன். நான் ஒரு முதல்வரின் தலைமையில் பணியாற்ற வேண்டுமென்பதால், என் தனிப்பட்ட கருத்துகளை, விருப்பங்களை வெளிப்படுத்துவது சரியாக இருக்காது. முதல்வர் மற்றும் துணை முதல்வரின் நடவடிக்கைகளுக்கு என் கருத்துகள் என்றைக்கும் பாதகமாக அமையாது’ என்று குறிப்பிட்டார். மேலும் ‘டெங்கு காய்ச்சலை ஒழிக்க தமிழக அரசு சுனாமி வேகத்தில் செயல்படுகிறது’ என்றும் அவர் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க