பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் கேரளா! - புகழாரம் சூட்டிய வைகோ

கேரளாவில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்ததற்காக, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

vaiko
 

திருவிதாங்கூர் தேவசம் போர்டு  63 பூசாரிகளைப் பணிக்கு எடுத்துள்ளது. இதில், 36 பேர் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் .
பூசாரிகள் தேர்வில், இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளதாகவும் தகுதி, திறமை அடிப்படையில் பூசாரிகள் தேர்வு நடைபெற்றதாகவும் கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை கோயிலில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கேரள அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பினராயி விஜயனுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எழுதியுள்ள கடிதத்தில்,  ’கேரளாவில் சமூக நீதியை நிலைநாட்ட தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். பிராமண சமூகத்தை அல்லாத பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் 36 பேரை  அர்ச்சகராக நியமித்தது ஒரு வரலாற்று நிகழ்வு. முக்கியமாக அந்த 36 பேரில் 6 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மிகச்சிறப்பு. 

தந்தை பெரியார் தீண்டாமையை ஒழித்து சமூக நீதியை நிலைநிறுத்த கேரளாவின் வைக்கம் என்ற இடத்தில் போராட்டம் நடத்தியவர். கேரள அரசு அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்து பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது. கேரளாவின் இந்த பெருமை தேசம் முழுவதும் பரவட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!