Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செவிலியர்களாக சுகாதாரப் பணியாளர்கள் - மதுரை அரசு மருத்துவமனை கொடுமை

தமிழகம் முழுவதும் டெங்கு போன்ற கொடிய நோய்களால் மக்கள் அவதியுற்று வருகிறார்கள். வசதியானவர்கள் தனியார் மருத்துவமனை செல்கிறார்கள். ஏழை எளிய மக்கள் பெரும்பாலானோர் அரசு மருத்துவமனையை நாடிச்செல்கிறார்கள். ஆனால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தகுந்த மருத்துவர்கள், மருத்துவ பரிசோதனை வசதி, படுக்கை வசதி, மருத்துவப் பணியாளர்கள், இல்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. 'டெங்குவால் அதிகமானோர் இறக்கவில்லை, அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் சிறப்பாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தொடர்ந்து சொல்லிவருகிறார்.

செவிலியர்


இந்நிலையில், தென்மாவட்ட மக்கள் அதிகம் நம்பியுள்ள மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு டெங்கு உட்பட பல நோய்களுக்கு நிவாரணம்பெற தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகிறார்கள். நோயாளிகளைக் கவனிக்க போதிய மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் இல்லாத நிலை நீடிக்கிறது. சமீபத்தில் நர்ஸ் பற்றாக்குறையால், இங்கு ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப்பணிகளை மேற்கொள்ளும் பத்மாவதி நிறுவனத்தின் பணியாளர்கள், நர்ஸ் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்துவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பற்றி விசாரித்தபோது மருத்துவமனை நிர்வாகம்தான் சானிடரி ஒர்க்கர்களை மருத்துவப் பணிகளை செய்ய வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி, முறையான பயிற்சி எடுத்தவர்களே, மருத்துவரின் ஆலோசனையின்படி  நோயாளிகளுக்கு மருத்துவ சேவையை அளிக்க வேண்டும் என்று விதிகள் உள்ள நிலையில், துப்புரவுப் பணியாளரை சலைன் ஏற்ற எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை மறைக்கும் வேளையில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement