டெங்குக்கு எதிராக தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு!

தொல்.திருமாவளவன்


மிழகத்தில் அதிவேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலால், சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பலர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கிடையில், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள  நோயாளிகளை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பார்வையிட வந்த  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கண்டுபிடிக்க முடியாத நிலையில் எந்தக் காய்ச்சலும் இப்போது இல்லை. சுகாதாரத்துறை அமைச்சகம் விதிக்கப்பட்டிருக்கிற ஆணைகளின்படி அனைத்தும் நடந்துகொண்டிருக்கிறது” என்றார் 

டெங்கு குறித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பிவரும் நிலையில், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ''டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில், அக்டோபர் 11-ம் தேதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என்று அறிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!