Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேரள அரசைப் பாராட்டிய கமல்!

பிராமணர் அல்லாதோர் 36 பேரை அர்ச்சகராக நியமித்த திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோருக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார். 

திருவிதாங்கூர் தேவசம் போர்டு,  63 அர்ச்சகர்களைப் புதிதாக நியமனம்செய்துள்ளது. அதில், 36 பேர் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், அர்ச்சகர்கள் தேர்வில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளதாகவும் தகுதி, திறமை அடிப்படையில் தேர்வு நடைபெற்றதாகவும் கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்திருந்தார். சபரிமலை கோயிலில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். முதன்முறையாக, பிராமணர் அல்லாதோர் திருவிதாங்கூர் தேவசம் போர்டால் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழகத்தில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கேரள அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர். 

இந்த நிலையில், பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனத்துக்காக கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இதன்மூலம் பெரியாரின் கனவு நனவானதாகவும் கூறியுள்ளார். மற்றொரு பதிவில், வைக்கம் வீரருக்கு வணக்கம் என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார்.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement