Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆங்கில இணையதளம் மீது ரூ.100 கோடி கேட்டு அமித்ஷா மகன் வழக்கு!

பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நிறுவனத்தின் சொத்து மதிப்பு பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, 16 ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அமித்ஷா மகன் ஜெய் ஷா

இது குறித்து ஆங்கில இணையதளம் ஒன்று 'The Golden Touch of Jay Amit Shah' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், '' மோடி பிரதமராக பதவியேற்றபின், அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் 'டெம்பிள் என்டர்பிரைசஸ்' நிறுவனம் ரூ.50 ஆயிரம் லாபத்தில் இருந்து ரூ.80 கோடியாக உயர்ந்துள்ளது. 2012-13 ஆண்டில்  6,230 நஷ்டத்தையும் 2013-14-ம் ஆண்டில் டெம்பிள் என்டர்பிரைசஸின் நிறுவனம் 1,724 ரூபாய் நஷ்டம் கண்டுள்ளது. 2014-15-ம் ஆண்டில் 50 ஆயிரம் வருவாயில் நிகரலாபம் ரூ.18,728 பெற்றுள்ளது. 2015-16-ம் ஆண்டில் டெம்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் ரூ.80.50 கோடியை எட்டியுள்ளது. இது, 16 ஆயிரம் மடங்கும் அதிகம். ராஜ்யசபா எம்.பி. பரிமல் நாத்வானியின் உறவினர் ராஜேஷ் கன்ட்வாலா நடத்தி வரும்  KIFS நிதி நிறுவனம் எந்தப் பாதுகாப்பு ஆவணங்களையும் பெறாமல், ஜெய் ஷா நிறுவனத்துக்கு ரூ.15 கோடியே 78 லட்சம் கடன் வழங்கி உள்ளது'' எனக் கூறப்பட்டுள்ளது.

பரிமல் நாத்வானி 2008-ம் ஆண்டு 2014-ம் ஆண்டு என இரு முறை ராஜ்யசபா எம்.பி-யாக தேர்வுசெய்யப்பட்டவர். ரிலையன்ஸ் நிறுவனத்தில் corporate affairs பிரிவின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு திருபாய் அம்பானியுடன் இணைந்து உழைத்தவர்.

கடந்த வருடம் நவம்பர் 8-ம் தேதி, ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குள்ளாக்கப்பட்டன. மோடியின் இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை அதள பாதாளத்துக்குக் கொண்டுசென்று விட்டதாக பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் நேற்று ஒரு தகவல் வெளியிட்டார், அதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அமித்ஷாவின் மகன் மட்டுமே லாபம் அடைந்ததாக  ‘ஷா இன் ஷா ஆப் டெமோ’ ஜெய் அமித்’’எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், செய்தி வெளியிட்டிருந்த ஆங்கில இணையதளமான 'தி வயர்' லிங்கையும் அதில் இணைத்திருந்தார். 

இந்த செய்திக்கு மறுப்புத் தெரிவித்துள்ள ஜெய் ஷா, “ தந்தை அமித்ஷாவின் அரசியல் செல்வாக்கு காரணமாக எனது நிறுவனம் லாபம் ஈட்டியிருப்பது போன்ற மாயை அந்தக் கட்டுரை ஏற்படுத்தியிருக்கிறது. நிறுவனத்தின் வர்த்தகங்கள் சட்டத்துக்குட்பட்டு முறையாக நடைபெறுகிறது. வரி மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் ஆராய்ந்தாலே இந்த விவரங்கள் தெரியவரும். எனக்கும் தந்தையின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்த இணையதளத்தின் மீது ரூ.100 கோடி கேட்டு மான நஷ்டஈடு வழக்கு தொடரப்படும் ''எனத் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement