Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கி அதிகாரிகள் விசாரிக்கப்படவில்லையா? சேகர் ரெட்டி வழக்கில் சி.பி.ஐ-க்கு நீதிபதி சரமாரி கேள்வி 

புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் தொடர்பாக, வங்கி அதிகாரிகள் யாரும் விசாரிக்கப்படவில்லையா என்று சேகர் ரெட்டி வழக்கில் சி.பி.ஐ-க்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு வருமானவரித்துறை நடத்திய சோதனையில், பல கோடி மதிப்பிலான பணம், தங்கம் பறிமுதல்செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக சேகர் ரெட்டி உள்ளிட்ட  நான்கு பேர் மீது வழக்குப் பதிந்தது சி.பி.ஐ. இதையடுத்து, சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் கைதுசெய்யப்பட்டனர். பின்னர், அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்துசெய்யக்கோரி, சேகர் ரெட்டி உள்ளிட்ட நான்கு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சேகர்ரெட்டி உட்பட ஐந்து பேருக்குப் பின், யார் யார் கைதுசெய்யப்பட்டனர் என்றும் சேகர் ரெட்டி வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் சி.பி.ஐ-க்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், 34 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்றும் புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் தொடர்பாக வங்கி அதிகாரிகள் யாரும் விசாரிக்கப்படவில்லையா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி, வரும் 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல்செய்ய சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement