Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'வண்ண வண்ண ஓவியங்கள்... சின்னச்சின்ன கரங்களுக்கு!' - இலவசமாகக் கற்பிக்கும் ஆசிரியர்

ஆசிரியர் -  குழந்தைகள்

பெரிய மாளிகை இல்லை... கல்வியைப் போதிக்க பெரிய கரும்பலகைகள் இல்லை... ஆனால், ஓவியத்தையும் வாழ்க்கைக் கல்வியையும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் பேராவலுடன் செயல்பட்டுவருகிறார் ஓர் ஆசிரியர். 

மதுரை மீனாட்சிபுரத்தில் உள்ள குடிசைவாழ் குழந்தைகளுக்கு, இலவசமாக ஓவியக் கல்வியும் வாழ்க்கைக் கல்வியும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் குணா, ''நான் ஓவியத் துறையில் முதுகலைப் படிப்பு முடிச்சிருக்கேன். கொஞ்ச நாள் சினிமாவில் ஆர்ட் டைரக்டரா மதுரையின் தனியார் கல்லூரியில் ஓவிய ஆசிரியரா வேலைசெய்துட்டிருந்தேன். எப்படியெல்லாம் வரையக்கூடாதோ, அப்படியெல்லாம் முதலில் வரைந்து பாருங்கள். அப்புறம், எப்படி வரையறதுனு சொல்றேன் என்பதுதான் என் ஸ்டைல். ஓவியம் மட்டுமல்லாமல், தொழில்சார்ந்த விஷயங்களையும் சொல்லிக்கொடுக்கிறேன். 'உங்கள் கற்பனையோடு விளையாடுங்கள். அதுதான் உங்களை தனித்துக் காட்டும்'' என்பேன். சிலைகள் செய்வது, நிகழ்ச்சி மேடைகள் அமைப்பது என கற்றுக்கொடுத்திருக்கிறேன். ஒரு கட்டத்துக்கு அப்புறம், கல்லூரி வேலையிலிருந்து வெளியேறிட்டேன். வசதி வாய்ப்புகள் எதுவும் இல்லாத குழந்தைகளிடம் கலையை எடுத்துட்டுப் போகணும். அது, அவங்களுக்குப் பெரிய தன்னம்பிக்கையையும் சுய வேலையையும் உருவாக்கணும்னு முடிவு பண்ணினேன்'' என்கிறார் குணா. 

 

ஆசிரியர் - குழந்தைகள்

இலவசமாக கற்பிக்கிறேன் என்ற வார்த்தையையே சொல்லி, அந்தக் குழந்தைகளைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை என்கிற இவர், அந்த மாணவர்களோடு ஒரு நண்பன்போல ஒன்றாகக் கலந்து கற்றுத்தருகிறார். 

''மாணவர்களுக்குத் தேவையான வரைபட பேப்பர்கள், போர்டுகள் எல்லாத்தையும் ஜெ.வசந்த் ஆர்ட்ஸ் ஃபவுண்டேஷனின் முன்னாள் முதல்வர் சின்ராஜ் ஜோசப் கொடுத்து உதவுகிறார். சனி, ஞாயிறு இரண்டு நாள்களும் வகுப்பு நடக்கும். மீனாட்சிபுரம், கமலா நகர், கூடல்நகர் பகுதிகளில் வகுப்புகள் நடக்கும். எந்தக் குழந்தையும் வரலாம். திருவள்ளுவர் கழகம் மெய்யப்பன், அம்பேத் பாபு உள்ளிட்ட தோழர்கள் மாணவர்களை ஒருங்கிணைக்கிறார்கள். ஓவியப் பயிற்சியோடு, இயற்கை விவசாயம், சத்தான உணவு முறை, பழைய பொருள்களைப் பயனுள்ள பொருள்களாக மாற்றுவது போன்றவற்றையும் சொல்கிறோம். வருங்கால தலைமுறையின் மனதில் இயற்கையின் முக்கியத்துவத்தையும் வாழ்க்கை மீதான தன்னம்பிக்கையையும் விதைக்கும் சின்ன முயற்சி இது'' எனப் புன்னகைக்கிறார் குணா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement