சி.ஆர்.ஆர். விகிதம் 0.25% குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு | RBI cuts CRR by 25 bps, repo rate unchaged at 8 pc

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (17/09/2012)

கடைசி தொடர்பு:17:03 (17/11/2017)

சி.ஆர்.ஆர். விகிதம் 0.25% குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதுடெல்லி:  சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தை  ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மத்திய ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை  அறிவிக்கப்படும்.

அதன்படி ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட கடன் கொள்கையில் சி.ஆர்.ஆர். எனப்படும்  வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும்  செய்யப்படவில்லை. தொடர்ந்து 8 சதவீதமே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் வரவேற்பு

இந்நிலையில் சி ஆர் ஆர் விகிதத்தை 0.25% குறைத்துள்ள ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.


டிரெண்டிங் @ விகடன்