Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெங்கு விழிப்பு உணர்வு - உறவினர்களுக்குக் கடிதம் அனுப்பிய அரசுப் பள்ளி மாணவர்கள்

உறவினர்களுக்கு கடிதம் அனுப்பி டெங்கு விழிப்புணர்வு

டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான ஏடிஸ் கொசு உற்பத்தியைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் டெங்கு காய்ச்சல் குறித்தும் உறவினர்களுக்குக் கடிதம் அனுப்பி விழிப்பு உணர்வு ஏற்படுத்தியுள்ளனர் தூத்துக்குடி மாவட்டம் வாழவல்லான் அரசுப் பள்ளி மாணவர்கள். 

உலக அஞ்சல் தினமான இன்று அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதுதல் பயிற்சியோடு தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் டெங்கு காய்ச்சல் குறித்தும் அது ஏற்படக் காரணமாக அமையும் கொசு உற்பத்தியைத் தடுக்கும் வகையில் வாழவல்லான் ஊராட்சி மன்றம் சார்பில், வாழவல்லான் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அவர்களின் உறவினர்களுக்குக் கடிதம் எழுதி அஞ்சல் அட்டையை போஸ்ட் செய்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர். 

உறவினர்களுக்கு கடிதம் அனுப்பி டெங்கு விழிப்புணர்வு

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் கூறுகையில் ‘‘6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 362 மாணவ, மாணவிகளில் ஒவ்வொருவருக்கும் ஓர் அஞ்சல் அட்டையைக் கொடுத்து அவரவர் உறவினர்களுக்கு டெங்குவை ஏற்படுத்தும் கொசு உற்பத்தி தடுப்பு குறித்து கடிதம் எழுதச் சொன்னோம். அக்கடிதத்தில், முதலில் நலம் நலமறிய ஆவல் எனத் தொடங்கி, உங்கள் வீட்டிலோ வீட்டுக்கு அருகிலோ உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருள்கள், டயர்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியிருந்தால் தண்ணீரை உடனே அகற்றிவிட வேண்டும். தெருக்களில் தண்ணீர் தேங்கியிருந்தால் தயக்கம் காட்டாமல் நீங்களே அகற்றுங்கள். தண்ணீர் சேமிக்கும் குடம், குடிநீர்த் தொட்டிகள் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருப்பதோடு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். இதன் மூலம் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகாமல் தடுக்க வேண்டும். இதுகுறித்தும் டெங்கு காய்ச்சல் குறித்தும் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். தொடர்காய்ச்சல் வந்தால் நிலவேம்பு கசாயம் போட்டுக் குடிப்பதோடு தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாணவர்கள் அஞ்சல் அட்டையில் எழுதினார்கள்.

உறவினர்களுக்கு கடிதம் அனுப்பி டெங்கு விழிப்புணர்வு

 பின்பு, ‘ உலகநாடெங்கும் அக்டோபர் 9ம் தேதியான இன்று உலக அஞ்சல் தினமாகக் கடைபிடிக்கப்படும் இந்த நாளில் அஞ்சல் துறையின் சேவைகளை நினைவு கூர்ந்து, அதன் பெருமைகளை உலகிற்கு தெரிவிப்பேன் எனவும் நான் எனது வீட்டிலோ வீட்டின் சுற்றுப்புறத்திலோ டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொசு உற்பத்தியைத் தடுப்பேன் எனவும் உறுதிகூறுகிறேன்’ என உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின், அஞ்சல் அட்டைகளைத் தபால்பெட்டியில் போஸ்ட் செய்தனர். ’’ என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement