எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா - அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டத்தில், வரும் நவம்பர் 5-ம் தேதி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஆயத்த வேலைகளை, மாவட்ட நிர்வாகம் ஒரு மாதத்துக்கு முன்பாகவே ஆரம்பித்துவிட்டது.

துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று தனது கட்சி நிர்வாகிகளுடன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவில், கட்சி சார்பாக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதுபற்றி விவாதித்தார். அததைத் தொடர்ந்து, நூற்றாண்டு விழா நடக்க ஒதுக்கப்பட்டுள்ள போடி விலக்கு அருகில் இருக்கும் மைதானத்தை இன்று பார்வையிட பன்னீர்செல்வம் வந்தார். அதிகாரிகளிடம், விழா ஏற்பாடுகள்குறித்து கேட்டறிந்தார்.

எங்கே மேடை அமைக்கப்படும், எங்கே பார்க்கிங் வசதி செய்யப்படும் போன்றவை குறித்து கேட்டறிந்தார். சில ஆலோசனைகளையும் வழங்கினார். அதை கேட்டுக்கொண்ட அதிகாரிகள், உடனே வேலையைத் துவங்குவதாகத் தெரிவித்தனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக, தனது சொந்த ஊரான பெரியகுளத்துக்கு பன்னீர்செல்வம் வரும்போதெல்லாம், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாகுறித்து அதிகாரிகளுடன் விவாதித்த வண்ணம் இருக்கிறார். இந்த விழா நடைபெறும் மைதான ஆய்வு, மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், கம்பம் எம்.எல்.ஏ., ஜக்கையன். தேனி எம்.பி., பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!