கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 16 குழந்தைகள் இறப்பு..! மீண்டும் சோகம்

கோரக்பூர் அரசு மருத்துவமனை கல்லூரியில் ஒரு நாளில் மட்டும் 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூர் பகுதியிலுள்ளது பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனை கல்லூரி. இந்த மருத்துவமனையில், ஒரு நாளில் மட்டும் 16 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் பிறந்த குழந்தைகளும் பத்து அடக்கம். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான குழந்தைகள் மூளை பாதிப்பின் காரணமாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 1,470 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 310 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் காரணமாக ஒரே நாளில் 63 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிட்டத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!