Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளி போனஸ் - 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

காஞ்சிபுரம் பகுதியிலுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாகத் துண்டுப்பிரசுரங்களைப் பொதுமக்களிடத்தில் விநியோகம் செய்துவருகின்றனர்.

108

ஊதிய உயர்வு மற்றும் தீபாவளிக்கு போனஸ் கொடுக்க வேண்டி கடந்த வாரம் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அதைத்தொடர்ந்து தமிழக அரசிடம் பேச்சுவார்தை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு நாளைக்குப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பேச்சு வார்த்தையில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், காஞ்சிபுரம் பகுதியில் வேலை செய்யும் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள். இதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துண்டுப்பிரசுரங்களைக் கொடுத்து வருகின்றனர்.

108

“தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருந்துவருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற பகுதிகளிலிருந்து சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு அதிக அளவில் நோயாளிகளை ஏற்றிச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. போக்குவரத்து நெரிசலால் சென்னை சென்று வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து வேலை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. சரியான நேரத்தில் எங்களால் செல்ல முடியாத காரணத்தால், பொதுமக்களின் அதிருப்தியைச் சந்திக்க நேரிடுகிறது. தாம்பரம், செங்கல்பட்டு போன்ற பகுதியில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களைப் போர்க்கால அடிப்படையில் இயக்க வேண்டும்” என 108 வாகன ஊழியர்களின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தெரிவிக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement