வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (09/10/2017)

கடைசி தொடர்பு:19:27 (09/10/2017)

நடராசன் உடல்நிலை..! மருத்துவமனை விளக்கம்

நடராசன் தற்போது கல்லீரலுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் இருந்துவருகிறார் என்று மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. 


சசிகலாவின் கணவர் நடராசன், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், அவருக்குக் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரைப் பார்ப்பதற்காக சசிகலா சிறையிலிருந்து ஐந்து நாள் பரோலில் வெளிவந்துள்ளார். இந்தநிலையில், நடராசனின் உடல்நிலை குறித்த அறிவிப்பை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில், 'நடராசன் தற்போது கல்லீரலுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுப் பகுதியில் மருத்துவர் முகமது ரீலாவின் கீழ் தீவிரக் கண்காணிப்பில் இருந்துவருகிறார். அவருக்கு மாற்றப்பட்ட உறுப்புகள் நன்றக்ச் செயல்படுகின்றன. அவர், செயற்கை சுவாச உதவியுடன் இருக்கிறார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.